தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் தற்போது உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சரத்குமார் வயிற்றுப்போக்கால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, திடீரென உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்றைய தினம் (11-12-2022) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தற்போது சரத்குமாரின் மகள் வரலட்சுமி மற்றும் அவருடைய மனைவி ராதிகா ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளனர்.
மேலும் இதுவரை சரத்குமாரின் உடல்நிலை தொடர்பில், மருத்துவமனை நிர்வாகம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்றாலும், சரத்குமார் பூரண நலம் பெற வேண்டி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இவ்வாறாக இவருடைய உடல்நிலை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள்.
அதாவது “அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் புரட்சிதிலகம் நாட்டாமை ரா.சரத்குமார் அவர்கள், சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார்கள்.
பரிசோதனை நிறைவு செய்து தலைவர் அவர்கள் தற்போது பூரண நலத்துடன் உள்ளார். யாரும் எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.