தமிழ்நாட்டின் சென்னை அருகே கட்டுமானப் பணிகளில் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஒரு வளைவு இடிந்து வீழ்ந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அசாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பங்களுக்கு இந்திய அரசு தலா 10 லட்சம் ரூபா இழப்பீடு அறிவித்துள்ளது.
அவர்களின் உடல்கள் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
காயமடைந்த தொழிலாளர்கள், விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபா இழப்பீடு அறிவித்தார்.
மேலும் காயமடைந்தவர்களுக்கு அரசு 50,000 ரூபா இழப்பீடு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களின் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.