தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துகள் எதுவும் என்னிடம் இல்லை, இறுதிப் போரின்போது நான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்தேன் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வொன்றின் பின் கருத்த வெளியிடும் போது இதனைக் குறிப்பிட்டார்
தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
இறுதி யுத்தத்துக்கு பின்னர் விடுதலைப் புலிகளின் சொத்துகள் உங்கள் வசமானது என எழுப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கையிலேயே கே.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இறுதிபோரின்போது நான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்தேன், எனக்கு எந்தவொரு சொத்தும் வழங்கப்படவில்லை, நாளாந்த செலவுக்கே பணம் வழங்கப்பட்டது. அவ்வாறு சொத்துகள் இருந்திருந்தால் எமது மக்களை அழிவில் இருந்து மீட்டிருக்கலாம்.
விடுதலைப்புலிகள் எவ்வாறான சொத்துகளை விட்டுச் சென்றனர் என்பது எவருக்கும் தெரியாது, எனவே, இப்பிரச்சினைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்