தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6ம் சீசன் கடந்த மாதம் தான் நிறைவு பெற்றது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் விஜய் டிவி நகைச்சுவை நடிகர் அமுதவாணன் போட்டியாளராக கலந்துகொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளரான ஜனனியும் போட்டியாளராக வந்திருந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் வரை அமுதவாணன் உடன் நெருக்கமாக இருந்தார். அவர்கள் அண்ணன் தங்கையாக தான் பழகுவதாக கூறினார்கள்.
இந்த நிலையில் விஜய் டிவியின் KPY நிகழ்ச்சிக்கு அமுதவாணன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
அப்போது ஸ்ருத்திகா அவரிடம் ஒரு கேள்வி கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தார்.
அமுதவாணனுக்கு திருமணம் ஆகிவிட்டதா என அவர் கேட்க, அவருக்கு 3 பிள்ளைகளே இருக்கிறது என ஷிவி கூறினார்.
‘நீங்க ஜனனியை லவ் பண்றீங்கனு லைட்டா நெனச்சேன்’ என அந்த நிகழ்ச்சியின் ஜட்ஜ் ஆக இருக்கும் ஸ்ருத்திகா சொல்ல அமுதவாணன் கடும் அதிர்ச்சி ஆனார்.
ஜனனி எனக்கு உடன் பிறக்காத தங்கை மாதிரி என கூறி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.