தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கையில் புதிய டாஸ்க் ஒன்று பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு நீதிமன்றம் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்கில் நீதிபதியாகவும், வழக்கறிஞராகவும் மாறி, தினம் தோறும்… பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சில பிரச்சனைகளை நீதிமன்றத்தில் எடுத்து வந்து வாதாடி வருகிறார்கள்.
அதாவது வழக்கு தொடர்ந்தவருக்கு அவருடைய ஆதரவாளர்கள் வழக்றிஞராக மாறி வாதாடி வருவதையும் பார்க்க முடிகிறது.
இருப்பினும் குறிப்பாக அசீம் மற்றும் விக்ரமன் இருவரும், நிஜமாகவே நீதிமன்றத்தில் வாதாடுவது போல் வாதாடியது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.
அந்த வகையில் இன்று குயின்சி மற்றும் கதிரவன் இடையே மிகவும் காரசாரமான விவாதங்கள் நடந்து வருவதை பார்த்து வருகிறோம்.
இந்த பிரச்சனைக்கு நடுவே செம்ம டென்சன் ஆன குயின்சி பிக்பாஸ் வீட்டிலுள்ள அழகிய கொக்கு பொம்மை ஒன்றை உடைத்து விடுகிறார்.
மேலும் இதைத்தொடர்ந்து தெரியாமல் தான் பொம்மையை உடைத்தேன் என பிக்பாஸ்ஸிடம் கூற, பிக்பாஸ் மிகவும் வித்தியாசமான தண்டனை கொடுக்கிறார்.
அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொரு கமரா முன் சென்று தெரியாமல் கொக்கு பொம்மையை உடைத்து விட்டேன் எனக் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்கிறார்.
இதனை குயின்சி சரியாக செய்கிறாரா? என்பதை சோதனை செய்ய மைனாவையும் பிக்பாஸ் நியமித்தார். இதை அடுத்து குவின்சியும் ஒவ்வொரு கமராவிடமும் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்க சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கமராக்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு கேமராவிடமும் சென்று ஓடி ஓடி குயின்சி மன்னிப்பு கேட்டுள்ளார்.
அத்தோடு தன்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு மன்னிப்பை யாரிடமும் கேட்கவில்லை என வருத்தமாக கூறியுள்ளார்.