ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய கொள்கை விளக்க உரையில் தமிழ் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடவில்லை.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவோ, தீர்வு நோக்கிய ராஜபக்ச அரசின் நகர்வு தொடர்பாகவோ ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எதுவும் குறிப்பிடாதமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேற்றுச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்தார். சம்பிரதாய வரவேற்புகளின் பின்னர் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை நடைபெற்றது.

