தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒன்றான விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் நகைச்சுவை நடிகர் புகழ்.
தற்போது இவரின் நகைச்சுவைக்கென்றே ஒரு ரசிகர்கள் பட்டாளமே இவருக்கு உண்டு.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே தோன்றி வந்த புகழ் தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதாவது காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி ஒரு படத்தில் ஹீரோவாகவும் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் போட்டோவை பதிவிட்டு மனதை உருக்கும் வகையில் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார் புகழ்.
அதாவது “முதல்முறையாக பின்னால் அமர்ந்திருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன், என் முன்னால் தமிழ் சினிமா இருப்பதால் (உலகநாயகன்) சினிமாவில் உங்களை பார்த்து கற்றுக்கொள்ளும் மாணவர்களில் நானும் ஒருவன். சினிமா கடவுளை கண்ட மகிழ்ச்சியில் நான்” என அப்பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.