தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
மற்ற சீசன்களை போலவே இந்த சீசனில் ரொமான்ஸ் இல்லையென்றாலும் சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டுள்ளது.
இருப்பினும் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்ததாக இருப்பதாகவே சிலர் கருதுகின்றனர். மொத்தம் 21 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் இந்த போட்டியிலிருந்து இதுவரை 10 பேர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் டாஸ்க்கில் மீதமிருக்கும் 11 போட்டியாளர்களும் விளையாடி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 66வது நாள் கடந்துள்ள நிலையில் இந்த வாரம் சொர்க்கவாசிகள், நரகவாசிகள் என்னும் இரு பிரிவுகளாக போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இதில் வழக்கம் போல சண்டை, சச்சரவு அனைத்தும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் பெறுவதற்கான டாப் 3 பைனலிஸ்ட்கள் யார், யாராக இருப்பார்கள் என போட்டியாளர்களிடம் கேட்கப்படுகிறது.
அதற்கு பதிலளிக்கும் ஏடிகே, விக்ரமன் எனவும், தனலட்சுமி அசீம் இருப்பார் என்றும் கூறியுள்ளார். அதன்படி அசீம், விக்ரமன் இடையே இனி பயங்கரமான மோதல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, ஷிவின், தனலட்சுமி இருவருமே டஃப் கொடுத்து விளையாடி வருகின்றனர். அதனால், அவர்களில் ஒருவர் கண்டிப்பாக இறுதிவரை செல்வார்கள் என்று நெட்டிசன்கள் கணித்து வர்கின்றனர்.