தமிழகத்தில் குடும்பத்தாருடன் வசித்து வந்த இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் முகாமில் குடும்பத்தோடு வசித்து வந்தவர் வவுனியாவை சேர்ந்த ராணி (55).
இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென ஒரு விபரீத முடிவை எடுத்தார், அதாவது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தீக்குளித்து உயிரிழந்த ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து ராணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.