ஜோதிகா பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி பிறகு தமிழ் சினிமாவில் வாலி மூலம் எண்ட்ரீ கொடுத்தார். அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான குஷி, 12பி, முகவரி ஆகிய படங்கள் தொடர் வெற்றிகளை குவித்தது.
இதனால் ஜோதிகா மார்க்கெட் உச்சத்திற்கு போக, அதே நேரத்தில் காக்க காக்க படத்தின் மூலம் ஜோதிகா-சூர்யா காதலும் மலர்ந்தது.
பிறகு இரு வீட்டார் சம்மதத்தோடு இருவரும் திருணம் செய்து இன்று வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஜோதிகா தன் திரைப்பயணத்தின் முதன் முறையாக ஒரு மலையாள படத்தில் நடித்துள்ளார், அந்த படத்தின் பெயர் Kaathal the core. இப்படத்தில் இவர் மம்முட்டிக்கு மனைவியாக நடிக்கின்றார்.
இப்படத்தின் கதை என்னவென்றால், மம்முட்டி ரிட்டெயர் ஆனதும், தன் ஏரியா பஞ்சாயத்து போர்ட் தேர்தலில் நிற்க நாமினேஷன் தாக்கல் செய்கிறார்.
அதே நேரத்தில் ஜோதிகா தன் கணவர் தன் பால் ஈர்ப்பு கொண்டவர் என விவாகரத்திற்கு சமர்பிக்க, அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமே இப்படத்தின் கதையாம், இதை கேட்ட பலரும், எப்படியா இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள் என கேட்டு வருகின்றனர்.