எதிர்வரும் காலங்களில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் கை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர வெளியிட்டுள்ளார். அத்துடன் இனி எந்த அரசியல் கட்சியிலும் கூட்டணி கொள்வதில்லை என்றும் மைத்திரி முடிவு செய்துள்ளார்.
அதன்படி அடுத்த மாகாண சபை தேர்தலில் தனித்தே போட்டியிடப்போவதாகவும், அதற்காக தற்போது வரை 3000 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளார்.