இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனப் பங்குகளை ஐந்தாக பிரித்து தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதனை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பான வரைவு நாடாளுமன்றத்தில் நாளை புதன்கிழமை அரசாங்கம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.