தமிழகத்தில் இளம் தாயார் தனது குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
குத்தாலம் பகுதியைச் சேர்ந்த பாத்திபன் என்பவரின் மனைவி செல்வகுமாரி மற்றும் ஒரு வயது லிவிஷா என்ற பெண் குழந்தை நேற்று முன்தினம் மர்மமான நிலையில் உயிரிழந்து கிடந்தனர்.
இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக அவரது மாமியார் தனலட்சுமி 30 சவரன் வரதட்சணை கேட்டு இரக்கமின்றி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஏற்பட்ட மன உளைச்சலில் பெண் குழந்தையை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து பாத்திபன் மற்றும் அவர் தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.