கேரளாவில் சொந்த பிள்ளைகளை கைவிட்டு சகோதரியின் கணவருடன் தப்பிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யா(28) மற்றும் இவரது சகோதரியின் கணவன் 36 வயதான சஞ்சித் ஆகியோரையே தமிழகத்தின் மதுரையில் வைத்து ரயில்வே பொலிசார் கைது செய்துள்ளனர்.சஞ்சித் என்பவருக்கு இரண்டு பிள்ளைகளும் ஐஸ்வரியாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளனர். இருவரும் தங்கள் பிள்ளைகளை கைவிட்டு தப்பிய வழக்கிலேயே தற்போது சிக்கியுள்ளனர்.ஐஸ்வரியா மாயமானதை அடுத்து கணவர் பொலிசாரை நாடிய நிலையில், சஞ்சித்தும் மாயமானதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், இதை ஒரே வழக்காக விசாரித்த பொலிசார், இவர்கள் இருவரும் வேறு பெயர்களில் தமிழகத்தின் மதுரைக்கு பயணமாவது கண்டறிந்தனர்.
இதனையடுத்து, ரயில்வே பொலிசாரின் உதவியுடன், அவர்களை கைது செய்துள்ளனர். தற்போது கொல்லம் தனிப்படை பொலிசார் மதுரைக்கு சென்று இருவரையும் கொல்லத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.