கொழும்பு 7, பேஜெட் வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் முன்னாள் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் இன்றையதினம் (08-10-2024) குறித்த இல்லத்தில் இருந்து வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது உத்தியோகபூர்வ இல்லத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் கல்லூரிக்கு மாற்றுவதற்கு கடந்த அரசின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது என்ற பிரேரணையை தற்போதுள்ள அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததாக மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்நிலையில், கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் கல்லூரியின் செயற்பாடுகளுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்துவது தொடர்பான அனைத்து கடிதப் பரிமாற்றங்களும் நிறைவடைந்துள்ளதாகவும்,
அதன்படி இன்றையதினம் முதல் உத்தியோகபூர்வ இல்லம் சிறிமாவோ மகளிர் கல்லூரிக்கு மாற்றப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.