தக்காளியை முக்கிய பொருளாக வைத்து சட்னி, தொக்கு, கூட்டு, பொரியல், சாம்பார் எனப் பல்வேறு வடிவங்களில் எப்படிச் சாப்பிட்டாலும் தக்காளியின் குணம் நம்மை வந்து சேரும். தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட், சருமம் முதிர்ச்சி அடையாமல் காக்கும் பணியைச் செய்கிறது. இதிலுள்ள லைகோபீன், நச்சுப்பொருள்களை வெளியேற்றவும், புற்றுநோய் பாதித்த திசுக்களுடன் போராடி நோய்க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்படவும் கூடியது. அப்படிப்பட்ட தக்காளியை வீட்டில் உள்ள இட்லி மாவு, ரவையுடன் சேர்த்து வித்தியாசமான தக்காளி ரவை இட்லி செய்து அசத்துங்கள்.
என்ன தேவை?
தக்காளி – 2
இட்லி மாவு – ஒரு கப்
ரவை – ஒரு கப்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
தக்காளியை மைய அரைத்துக்கொள்ளவும். ரவையை வெறும் வாணலியில் வறுத்து அதை இட்லி மாவுடன் கலந்து வைக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி கலந்துவைத்துள்ள மாவை இட்லிகளாக ஊற்றி இட்லி குக்கரில் வேகவைத்து இறக்கினால் தக்காளி ரவை இட்லி தயார்.