கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாகர். இவரது மனைவி ஆஷியா.
இந்நிலையில், சாகர் கடந்த 6ம் திகதி முதல் காணாமல் போன நிலையில், காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சாகரை தேடி வந்தனர்.
சாகர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்ட நிலையில், அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். பொலிஸாரின் விசாரணையில் , மனைவி ஆஷியாவே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சாகரை கொலை செய்து செப்டிக் டேங்கில் வீசியது தெரியவந்துள்ளது.
ஆஷியாவுக்கும் கள்ளக்காதலன் சுஹைலுக்கும் இடையேயான தகாத உறவு குறித்து சாகருக்கு தெரியவந்ததால் , சாகரை கள்ளக் காதலனின் உதவியுடன் கொலை செய்ததாக ஆஷியா பொலிஸிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதை அடுத்து, பொலிஸார் ஆஷியா மற்றும் கள்ளக் காதலன் சுஹைலை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.