டொலர் பற்றாக்குறையால் நாடு திவாலாகும் அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் வெளிநாட்டுக் கடனை ஜனவரி மாதத்திற்குள் திருப்பிச் செலுத்தினால் 140 மில்லியன் டொலர்கள் மட்டுமே எஞ்சும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஆனால் செலவழிக்கக்கூடிய பணத்தின் அளவு மைனஸ் 437 மில்லியன் டாலர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை பெப்ரவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் செலுத்த வேண்டிய கடன் தொகை 4,843 மில்லியன் டொலர்கள் எனவும், ஆனால் இம்மாத இறுதியில் அது 140 மில்லியன் டொலர்கள் எனவும், மீதி 4,700 மில்லியன் டொலர்கள் எனவும் அவர் கூறினார்.