அரசாங்கம் கடுமையாக கொள்கையை கையாண்டு வருவதால், முழு நாட்டு மக்களும் தற்போது கடும் இறுக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர எனவும் தாம் கூறும் எதனையும் அரசாங்கம் கேட்பதில்லை எனவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளை வெலிமடை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.
முழு நாட்டு மக்களும் இறுகி போயுள்ளனர். எங்கும் டீசல் கிடைப்பதில்லை. நான் பதுளையில் இருந்து வரும் போது எனது வாகனத்தில் டீசல் இல்லை எனக் கூறினர்.
கொழும்பில் இருந்து கொண்டு வந்தாவது நிரப்புங்கள் என்று நான் கூறினேன். அரசாங்கம் மாத்திரமல்ல, தற்போது முழு நாடும் பிரச்சினையில் சிக்கியுள்ளது. அன்றாடம் சமாளிக்கும் பொருளாதாரமே எமது இருக்கின்றது.
இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொரை கேட்டுள்ளோம். அதில் எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டது. நாளை வேறு முறையில் இதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு நாளாந்தம் வாழ்க்கை ஓட்டும் பொருளாதார நிலைமையே காணப்படுகிறது எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதுளையில் இருந்து வெலிமடை நோக்கி சென்ற வாகனத்தில் டீசல் இருக்கவில்லை என்பதால், இடையில நின்று போனதாக கூறப்படுகிறது.