முன்னாள் அமைச்சரும் ராஜபக்ஷ சகோதரர்களின் தந்தையுமான டி.ஏ ராஜபக்ச நினைவு தினத்தை கொழும்பிலும் தங்காலையிலும் பிரமாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 24ஆம் திகதி நினைவு தினத்தை ம் பிரமாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மகிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் ராஜபக்ச குடும்பத்தினர் கலந்து கொண்ட நிலையில் , அதில் முக்கிய அம்சமாக மகிந்த அமரவீர இதில் கலந்துகொண்டார் .
இதன்போது தங்காலை மற்றும் கொழும்பில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், தங்காலை விழா ஏற்பாட்டினை அமரவீர பொறுப்பேற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நினைவு தூபி மீது தாக்குதல்
அதேவேளை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு போராட்டங்களின் இடையே தங்காலை வீரகெட்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையான டி,ஏ. ராஜபக்ஷவின் நினைவு தூபி போராட்டக்காரர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தூபியை அமைக்க பொது மக்களின் பணம் விரயம் செய்யப்ப்ட்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.