உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எந்தளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக மற்றொரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளதுஉத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், சர்தானா கோட்வாலி பகுதியை ஒட்டிய கிராமத்தை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி இவர் நேற்று முன்தினம் மாலை டியூசன் முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்
அப்போது, 4 வாலிபர்கள் அவரை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர் அவர்களிடம் இருந்து தப்பி, வீட்டுக்கு வந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடூரத்தை கடிதம் எழுதி வைத்து விட்டு அவமானத்தால் விஷம் குடித்தார்
மகள் மயங்கி கிடப்பதை பார்த்த பெற்றோர், மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார்
தற்கொலை கடிதத்தில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த லகான், விகாஸ் என்ற 2 பேருடன் சேர்ந்த 4 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக மாணவி குறிப்பிட்டுள்ளார் லகான், விகாசை கைது செய்த போலீசார் தலைமறைவான மற்ற 2 பேரை தேடி வருகின்றனர் ஏற்கனவே, உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடக்கும் நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது