வங்கதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் கடும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக டாக்கா விமான நிலையம் முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும் தீ வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்துவதில் கடும் சவால் ஏற்பட்டிருக்கிறது.
விபத்து காரணமாக சென்னை-டாக்கா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

