இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப்பெறுமாறு தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான குழு முன்னிலையில் அழைக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்துள்ளார்.