ஜேர்மனியில் பொலிசார் நடத்திய ரெய்டு ஒன்றைத் தொடர்ந்து, பெண்ணியவாத அமைப்பொன்றைச் சேர்ந்த பெண்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஜேர்மன் தலைநகர் ஜேர்மனியில், நேற்று பொலிசார் பாலஸ்தீன ஆதரவு இடதுசாரி பெண்ணியவாத அமைப்பொன்றைக் குறிவைத்து ரெய்டு ஒன்றை நடத்தினார்கள்.
The Zora group என அழைக்கப்படும் அந்த பெண்ணியவாத அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன அமைப்பான Popular Front for the Liberation of Palestine என்னும் அமைப்பை ஆதரிக்கும் அமைப்பாகும்.
பொலிசார் நடத்திய ரெய்டைத் தொடர்ந்து, சந்தேகத்துக்குரிய ஆறு பேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். அவர்களில் ஐந்துபேர் Zora அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
அந்த அமைப்பு, சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட அறிக்கை ஒன்றைத் தொடர்ந்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Zora அமைப்பினர் வெளியிட்ட அந்த அறிக்கையில், பாலஸ்தீனத்துக்கு விடுதலை கிடைக்கவில்லையென்றால், பெண்களுக்கும் விடுதலை கிடைக்காது என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாம்.