சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படத்திற்கு பெரும்பாலோனோர் பாசிட்டிவ் விமர்சனங்களே கொடுத்து வருகின்றனர்
இருப்பினும் சிலர் திரைக்கதை மோசமாக இருக்கிறது, டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகவே இல்லை என்று படம் குறித்து மோசமான விமர்சனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினி ரசிகர்கள், ஜெயிலர் படத்திற்கு வேண்டுமென்றே விஜய் ரசிகர்கள் நெகடிவ் விமர்சனம் கொடுத்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் பட்டத்தை மனதில் வைத்து கொண்டு தான் இது போன்று செய்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.