சசிகலா தற்போதெல்லாம் அடிக்கடி வெளியில் வரும் நிலையில் அவரின் நிழல் போல உடன் வரும் பெண் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலை ஆகி சென்னை வந்த பின்னர் தமிழக அரசியலில் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அவர் அறிவித்தார்.இதனிடையில் சசிகலா தஞ்சாவூருக்கு கிளம்பி சென்றார். அங்கிருந்து பல கோவில்களுக்கு சென்றபடி உள்ளார்.
சசிகலாவின் இந்த ஆன்மீக பயணத்தின் போது, அவருடன் பெண் ஒருவரும் உடன் செல்வதை வெளி வரும் புகைப்படங்களில் காணப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு எப்படி சசிகலா இருந்தாரோ, அதேபோன்று சசிகலாவுக்கு மற்றொரு சசிகலாவாக அவரது நிழலாக செல்லும் அந்த பெண் யார் என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த பெண் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி அவர் பெயர் பிரபா என்பதும், அவர் சசிகலாவின் உறவினர் என்றும் தெரிய வந்துள்ளது.
அதாவது டிடிவி தினகரனின் மனைவி அனுராதவின் உடன்பிறந்த சகோதரி தான் பிரபா ஆவார். இவரது கணவர் மருத்துவர் சிவக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது