ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷல், இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள ஆவணத்திற்கு எதிர்வரும் செவ்வாய் கிழமை பதிலளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், செவ்வாய் கிழமை பதிலளிக்க உள்ளதாக தெரியவருகிறது.
மிஷேல் பெஷல். ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகும் எதிர்வரும் 28 ஆம் திகதி, இலங்கை தொடர்பான தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார்.
இம்முறை மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை பிரித்தானியா தலைமையிலான நாடுகள் கொண்டு வரவுள்ளதாக ஏற்கனவ தகவல்கள் வெளியாகி இருந்தன.
எது எப்படி இருந்த போதிலும் இலங்கையில், அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மூன்று தசாப்த கால போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது.
2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உட்பட சர்வதேச அமைப்புகளும் சர்வதேச நாடுகளும், இலங்கைகு எதிரான யோசனைகளை கொண்டு வந்து, அவற்றை நடைமுறைப்படுத்த இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டன.
எனினும் யுத்தத்தில் நடந்த போர் குற்றங்கள், சர்வதேச மனிதாபமான சட்ட மீறல்கள், பாதிக்கப்பட்ட மக்கள், இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எவ்வித தீர்வுகளும் இதுவரை சாத்தியமாகவில்லை.
ஐ.நா உட்பட சர்வதேச நாடுகள் இலங்கையின் தமிழர்களின் பிரச்சினைகளை பயன்படுத்தி அரசுக்கு அழுத்தங்களை கொடுத்தாலும் சர்வதேசத்தின் வலுவான முன்நகர்வு நடவடிக்கைகளை அதில் காணமுடியவில்லை என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு மெத்தன போக்கை கடைப்பிடித்து வருகிறது. இது சர்வதேசத் என்ன அழுத்தங்களை கொடுத்தாலும் அது இலங்கையில் சாத்தியமில்லை என்ற நிலைமையையே ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரும் வழமையான கூட்டத் தொடரை போன்ற ஒன்றாகவே இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளனர்.
கடந்த ஒரு தாசப்த காலமாக இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய மனித உரிமை மீறல்கள், போர் குற்ற வன்முறைகள் என்பன சர்வதேச தளத்தில் வெறும் பேச்சாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.