எவரெஸ்ட் சிகரத்தைவிட இரண்டு மடங்கு பெரிய வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து ஜூலை 14 ஆம் திகதி பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
Comet K2 என அழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரம், பூமியிலிருந்து 270 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்றும் தொலைநோக்கி இல்லாதவர்கள், மெய்நிகர் (Virtual) தொலைநோக்கியின் மூலம் வால் நட்சத்திரத்தின் பாதையை ஆன்லைனில் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வால் நட்சத்திரம் முதன்முதலில் 2017ம் ஆண்டில் சூரிய குடும்பத்தின் வெளிப்புற பகுதிகளில் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.