இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக, தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களை பகிர்ந்தளிக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமானின் அழுத்தம் அதிகமாக காணப்படுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பொருள்களை ஜீவன் தொண்டமானுக்கு தேவையானவர்களுக்கு வழங்குமாறு அழுத்தம் விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.