ஜாஅல பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சாமலி பெரேராவின் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க தடை விதித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (21) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் இன்றி அநீதியான முறையில் தனது பதவியை நீக்குவதற்கு தயாராகி வருவதாகவும், அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்கத் தயாராகி வருவதாகவும் மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுதாரர் சார்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகமகே, மார்ச் மாதம் மூன்றாம் திகதி வரை இந்த இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.