முதல் முறையாக பாலிவுட் பக்கம் திரும்பிய அட்லீயின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்ஜவான் ஜவான். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இன்று காலை ஜவான் படத்தின் டிரைலர் வெளிவந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அனைவருக்கும் செம விருந்து கொடுத்துள்ளது. கண்டிப்பாக இப்படம் மாபெரும் வெற்றியடையும் என தற்போதே திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் ஒன்று வெளிவந்தது. அதன்பின் அந்த பேச்சை கைவிட்டு விட்டதாகவும், இப்படத்தில் விஜய் நடிக்கவில்லை என்றும் கூறினார்கள்.
ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஜவான் டிரைலரில் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ள காட்சி வந்துள்ளது என கூறி புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
ஆனால், அது விஜய் தானா இல்லை ஷாருக்கானா என மற்றொரு தரப்பினர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் ஜவான் படத்தில் விஜய் நடித்துள்ளாரா இல்லையா என்று..