ஜப்பானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் புமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த பிரதமராக உள்ளார்.
2020 செப்டம்பரில் பதவியேற்று ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின்னர் பதவி விலகும் கட்சித் தலைவர் பிரதமர் யோஷிஹிட் சுகாவை கிஷிடா இந்த வெற்றியின் மூலம் மாற்றுவார்.
முன்னதாக பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர் பதவிகளை வகித்த பிரபல தடுப்பூசி அமைச்சரான டாரோ கோனோவை தோற்கடிக்க கிஷிடா புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் 257 வாக்குகளை பெற்றார்.
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 4 ம் திகதி நடைபெற உள்ளது