ஜனாதிபதி வந்து போகிறார் எனத் தெரிவித்து பால் மா நீண்ட வரிசையில் நின்ர பொதுமக்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் மிரிஹான வீதியில் இடம்பெறுள்ளது.
நுகேகொட மிரிஹான பிரதேசத்திலுள்ள தேசிய பால் மா கடையொன்றில் வர்த்தகத்தை கட்டுப்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் பல நாட்களாக நீண்ட வரிசையில் நின்றவர்கள் இன்று நிற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த வீதியில் ஜனாதிபதி அடிக்கடி பயணிப்பதாலும், வீதியில் இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பொலிஸார் வந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம் என எச்சரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செல்வதற்காக பால் மா விநியோகத்தை நிறுத்தினால் அது அசாதாரண நிலையாகும் என சுட்டிக்காட்டிய பொதுமனக் ஒருவர் குழந்தை களின் நிலை குறித்து நாட்டின் பிரதான தலைவர் நினைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த வர்த்தக நிலையத்தில் இன்று டோக்கன் முறையில் பால் மா விநியோகிக்கப் பட்டதாகத் தெரிகிறது. அதேநேரம் ஒரு சிலருக்கு பால் மா கிடைக்காத நிலையில் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் பால் மா தட்டுப்பாடு காரணமாக பால்மா கடைகள் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.