தற்போதைய அரசாங்கத்தை ஆர்ப்பாட்டங்கள் மூலம் கவிழ்க்க முடியாது என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ள வேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் தற்போது போராட்டங்களை விரும்பவில்லை.
இந்த நிலையில், எதிரணி அரசியல்வாதிகளும், அவர்களின் சகாக்களும்தான் தற்போது வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடுகின்றனர்.
எதிரணியினர் தங்கள் சுயலாப அரசியலுக்காகவே போட்டி போட்டுக்கொண்டு போராடுகின்றனர். ஆனால், ஒன்றுமே நடக்கப்போவதில்லை.
அவசியமற்ற இந்தப் போராட்டங்களை நிறுத்திவிட்டு நாட்டை மீளக்கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு எதிரணியினருக்கு நான் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்” – என்றார்.