ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எழுத்து மூலம் இன்று (26) பிற்பகல் முன்வைப்பதாகவும் அச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.