ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பதவி விலக தயார் என தெரிவித்ததாக கூறப்படும் செய்தி பொய்யானது என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) அறிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் அவர் இதனை அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகத் தயாரென அறிவித்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பதவி விலகத் தயார் என ஜனாதிபதி அறிவித்ததாக தெரிவிக்கப்படும் விடயத்தில் எவ்வித உண்மையும் இல்லை என சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, (Sajith Premadasa)
“நீங்கள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து இந்த விடயத்தை தெரிவித்தீர்கள். நீங்கள கூறிய விடயத்தை தான் நான் இங்கு வந்து தெரிவித்தேன்.
பொய்களையும், திரிபுப்படுத்தப்பட்ட விடயங்களையும் சொல்ல வேண்டிய தேவை எனக்கு இல்லை. தொன் கணக்கில் பொய் சொல்லாதீர்கள்” என சபாநாயகரை நோக்கி தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடாளுமன்றில் 113 எம்பிக்களின் ஆதரவை காட்டுவதாக இருந்தால் ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பை கையளிப்பதாக கூறினார்” என்றே தான் சுட்டிக்காட்டியதாக சபாநாயகர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.