எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு தொடர்பில், இன்றைய தினமும், கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் இடைக்கால ஜனாதிபதிப் பதவிக்குத் தற்போதைய பதில் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே (Ranil Wickremesinghe) பொருத்தமானவராக இருப்பார் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (17-07-2022) காலை தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.