நாட்டின் அபிவிருத்திக்கு தேசிய காலநிலை திட்டம் வழங்கும் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (29) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது.
காலநிலையால் பாதிக்கப்பட்ட நாடுகளது மன்றத்தின் (Climate Vulnerable Forum) ஆலோசகர்களான சாரா ஜேன் அஹமட் (Sara Jane Ahmed) மற்றும் மினியத் ஃபப்பிஹா (Miniyat fabbiha) ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அதற்கான உத்தேசத் திட்டம் ஒன்று ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய துறைகள் தொடர்பான திட்டங்களை ஆரம்பிப்பதற்காக சுற்றாடல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் சாத்தியக்கூற்று அறிக்கைகளில் தேசிய காலநிலை திட்டத்தை எவ்வாறு உள்வாங்குவது என்பது தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவன் விஜேவர்தனவும் கலந்துகொண்டார்