நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படாவிட்டால் மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வந்து அருகில் விறகுகளை பயன்படுத்தி கொத்து ரொட்டி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்களால் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் நாட்டிலுள்ள 80 சதவீத உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவகத் துறைக்கு மிகவும் சோகமான காலம் வந்துள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கொத்து ரொட்டி மாத்திரமின்றி விறகு பயன்படுத்தி சோறு, அப்பம் தயாரிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு கிடைக்கவில்லை என்றால் உணவகங்களில் உள்ள அனைத்து பொருட்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கொண்டு வரப்படும். பிள்ளைகள் பெண்கள் உட்பட அனைவரையும் ஜனாதிபதி செயலத்திற்கு முன்னால் அழைத்து வந்து கொத்து ரொட்டி செய்யப்படும். இன்று வரை உணவகங்கள் மூடப்பட்டால் உணவு நீர் போன்ற ஒன்றும் பெற முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக தீர்வு வழங்குமாறு அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

