இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுத்து வரும் வகையில், அதனை தடுக்க மாந்திரீக நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி செயலகத்திலிருந்து பெருமளவு புகை வந்தமையால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதற்கு காரணம் செயலகத்திற்குள் ஜனாதிபதி கோட்டபாயவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானக்காவின் மந்திரீக செயற்பாடுகளே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மக்களுக்கு எதிராக செயற்படும் வகையில் ஞானக்கா தனது கடமைகளை செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக நேற்றிரவு முதல் கொழும்பில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் போராட்டம் தடைப்பட்டுள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் சில இடங்களில் இன்று மதியம் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் குறிப்பிட்டார்.