ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகளவு ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்டகால வரலாற்றை கொண்ட அரசியல் குடும்ப உறுப்பினராக தான் காணப்பட்டாலும் தனக்கு தனிப்பட்ட அரசியல் அனுபவம் எதுவுமில்லை என இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
மேலும் பலவருட அரசியல் அனுபவத்தை கொண் பிரதமரிடமிருந்து அதிக ஈடுபாட்டை எதிர்பார்ப்பதாக தெரிவித்த கோட்டாபய, ஜனாதிபதியான பின்னரே பல அனுபவங்களை தம் உள்வாங்கியுள்ளதாகவும் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

