ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த செயலணியின் தலைவர் வண.கலகொட அத்தே ஞானசார தேரரால் இது கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியானது 2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த செயலணியின் தலைவராக வண.கலகொடே அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.