காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
பொலிஸாரின் எச்சரிக்கை அறிவித்தலையடுத்து காலிமுகத்திடல் போராட்ட களத்திலிருந்து போராட்டக்காரர்கள் நேற்றுமாலை அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில் இன்று ஜனாதிபதியை அவர்கள் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.