ஜனவரியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.