தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை ஹெச். வினோத் இயக்க பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். ஆனால், சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது, இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளிவரும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடித்து வரும் பராசக்தி படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளிவரும் என்கின்றனர்.இப்படியிருக்க விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் உடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் மோதுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், எக்காரணத்தை கொண்டும், ஜனநாயகன் படத்துடன் நம் படம் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இதனால், ஜனநாயகன் படம் வெளிவருவதற்கு முன்பே, பராசக்தி படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் இந்த அதிரடி முடிவின் காரணமாக, ஜனநாயகன் படத்துடன் பராசக்தி வெளிவராது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.