தனுஷ் நடிப்பில் அடுத்ததாக நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் படத்தைப் பற்றிய செய்தி ஒன்று இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் ஒரு பக்கம் கருத்துக்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் முதல் முறையாக உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். லோக்கல் டான் எப்படி இன்டர்நேஷனல் டான் ஆகிறான் என்ற கதையை அதிரடியாக கூறியுள்ளாராம் கார்த்திக் சுப்புராஜ்.
இந்த கூட்டணி உருவாகும் போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமான நிலையில் கடந்த வருடம் மே 1ஆம் தேதி ஜகமே தந்திரம் படம் தியேட்டர்களில் வெளியாக இருந்தது. ஆனால் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் தள்ளிச் சென்றது.
சமீபத்தில்கூட விஜய்யின் மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியானதால் கண்டிப்பாக ஜகமே தந்திரம் படமும் தியேட்டரில்தான் வெளியாகும் என தனுஷ் தன்னுடைய ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருந்தார். ஆனால் தயாரிப்பாளரின் தில்லுமுல்லு வேலைகள் தனுஷை பெரிய அளவில் கஷ்டப்படுத்தி உள்ளது பின்னர் அப்பட்டமாகத் தெரிந்தது.
இந்நிலையில் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக உள்ளது. ஜகமே தந்திரம் முழுக்க முழுக்க 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் தவறான காட்சிகள் இருந்தால் மட்டும் ஏ சர்டிபிகேட் கொடுக்க மாட்டார்கள் எனவும், சண்டைக்காட்சிகளும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் அதிகமாக இருந்தாலும் ஏ சர்டிபிகேட் தான் கொடுப்பார்கள் என்பதையும் ரசிகர்கள் அதிக அளவில் பரப்பி வருகின்றனர். என்ன இருந்தாலும் ஜகமே தந்திரம் படம் தாறுமாறாக இருக்கும் என்பதை மட்டும் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.