பொருளாதார ரீதியாக தற்போது இலங்கை கடைசி இடத்திற்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் சோற்றுக்காக கையேந்தி வருவதாகவும், மீண்டும் நாம் அனைவரும் மரவள்ளிக்கிழங்கு உண்ணும் யுகத்திற்கு செல்லப்போவதாகவும் அவர் கூறினார்.
மேலும் நாடு என்ற வகையில் ஒரு வேளை உணவாவது இருக்கவேண்டும் என தெரிவித்த அவர் , ஆனால் இலங்கையில் அதுவும் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.