இந்தி பிக் பாஸ் பிரபலமும், பாஜக நிர்வாகியும், நடிகையுமான சோனாலி போகாட் கோவாவுக்கு சென்ற இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 14வது சீசனில் கலந்து கொண்டவர் சோனாலி போகாட். கோவா , பா.ஜனதா தலைவர்களில் ஒருவராகவும் சோனாலி போகட் உள்ளார். அவருக்கு வயது 42. நடிகை சோனாலி போகட் தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமாகி டிக் டாக் வீடியோக்களில் பிரபலமானார்.
பிரபலமானதைத் தொடர்ந்து 2008-ல் பா.ஜனதாவில் இணைந்து 2019 அரியானா தேர்தலில் ஆதம்பூரில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார். அப்போதைய காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷ்னோய் பா.ஜனதாவில் சேர்ந்த நிலையில் அவர் கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.
இந்த இடைத்தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக சோனாலி போட்டியிடபோவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் மரணமடைந்திருக்கிறார்.
இறப்பதற்கு முன்பு தன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் சோனாலி. அதில் அவர் சந்தோஷமாக இருந்திருக்கிறார். இந்நிலையில் சோனாலி வீடியோ வெளியிட்ட வேகத்தில் இறந்துவிட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.