விற்பனைக்கு வருகின்றது சுத்த சைவ கோழிக்கறி; எங்கு தெரியுமா?
சிங்கப்பூரில் தாவர அடிப்படையிலான சைவ கோழிக்கறி உணவுகள் சிங்கப்பூரின் 11 உணவு நிறுவனங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.எதிர்வரும் 18ஆம் திகதி முதல் இந்த சுத்த சைவ கோழிக்கறி விற்பனைக்கு வரவுள்ளன.
அதன்படி ‘நெக்ஸ்ட் ஜென் ஃபூட்ஸ்’ எனும் நிறுவனம் ‘டிண்டல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள சைவ கோழிக் கறியை விற்பனைக்குக் கொண்டு வருகிறது.
இந் நிறுவனம் தயாரித்த ‘டிண்டல் தை’ எனும் சைவ கோழிக்கறி தண்ணீர், சோயா, தேங்காய்க் கொழுப்பு, சூரியகாந்தி எண்ணெய் உட்பட 9 பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்படுகின்றது.
அதோடு லிபி எனப்படும் அந்த நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பான தாவர அடிப்படையிலான கொழுப்புகள் மற்றும் வாசனைப் பொருளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த கோழிக்கறியில் ‘ஆன்டிபயோட்டிக்’, ‘ஹார்மோன்’ போன்றவை இல்லை என கூறப்படுகின்றது. அதோடு இதில் பூரித கொழுப் பின் அளவும் சோடியத்தின் அளவும் குறைவு.
மேலும் அங்குள்ள 11 உணவு நிறுவனங்களின் உணவகங்களில் இந்த சைவ கோழிக்கரியை பயன்படுத்தி விதம் விதமான உணவுகள் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது..