இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் “ரான்சம்வேர்” சைபர் தாக்குதலை எதிர்கொண்டதாகவும், இதனால் இன்று காலை பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் விமானத்தில் ஏறிய பிறகும், விமான நிறுவனத்திடம் இருந்து எந்த பதிலும் வராமல், பல மணி நேரம் காத்திருந்ததாக பலர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்வீட் செய்தனர்.
ரான்சம்வேர் (ransomware) சைபர் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் இத்தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன.
குறிப்பாக கடைகள், மருத்துவமனை, இ-மெயில் நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை குறி வைத்து இந்த ரான்சம்வேர் (ransomware) சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக கணினியில் மறைத்துவைக்கப்பட்ட அனைத்துக் கோப்புகளுக்கும் பாதிப்பு உண்டாகும் என்பதுடன், பல இயந்திரங்களுக்கு தீங்கிழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் சிஸ்டம்களில் ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் நடந்துள்ள நிலையில் , நிலைமை சரிசெய்யப்பட்டதாகக் ஸ்பைஸ்ஜெட் கூறியுள்ளது.